ரிலையன்ஸ் நிறுவனமானது அதன் தலைவர் முகேஷ் அம்பானி 2029 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நீடிக்க பங்குதாரரின் ஒப்புதலைக் கோரியுள்ளது.
தற்போது ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அம்பானியின் வயது 66. வரும் ஐந்தாண்டுகளில் இவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிக்கு, நிறுவனத்தின் சட்டப்படி விதிக்கப்பட்ட 70 வயதைக் கடப்பார். மேலும் அந்த வயது வரம்புக்கு அப்பால் அவர் நியமிக்கப்படுவதற்கு பங்குதாரர்களின் சிறப்புத் தீர்மானம் தேவை.
ரிலையன்ஸ் இயற்றிய ஒரு சிறப்புத் தீர்மானத்தில், ஏப்ரல் 2029 வரை நிறுவனத்தின் தலைவராக திரு அம்பானியை நியமிக்க பங்குதாரர்களின் ஒப்புதலைக் கோரியுள்ளது. அதோடு அம்பானியின் தற்போதைய பதவிக்காலம் ஏப்ரல் 19, 2024 அன்று முடிவடையும். அதன் பிறகு வரும் 5 ஆண்டுகளுக்கு முகேஷ் அம்பானியை நிர்வாக இயக்குநராக அதன் இயக்குநர்கள் குழு மீண்டும் நியமித்தது. கடந்த ஜூலை 21, 2023 அன்று இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கடந்த நிதியாண்டு 2021-ல் தொடங்கி தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக அவருக்கு சம்பளம் மற்றும் கமிஷன் எதுவும் வழங்கப்படவில்லை. அம்பானியின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 19, 2024 முதல் ஏப்ரல் 18, 2029 வரை அவருக்கு சம்பளம் அல்லது லாப அடிப்படையிலான கமிஷன் எதுவும் வழங்கப்படக்கூடாது என்று வாரியம் பரிந்துரைத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.














