மெட்ரோ ரயில்களில் ஒரே கட்டண முறை: குழு ஆலோசனை

August 13, 2022

  ரயில்வே துறையில் உள்ளது போல, அனைத்து மெட்ரோ ரயில்களிலும் ஒரே கட்டண முறையை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முன்னாள் திட்ட இயக்குனர் ராமநாதன் கூறுகையில், தற்போது, சென்னை உள்பட 20 நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 19 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், மெட்ரோ ரயில் கட்டணத்தில் பல்வேறு முரண்பாடு இருப்பதாக பயணியர் புகார் […]

 

ரயில்வே துறையில் உள்ளது போல, அனைத்து மெட்ரோ ரயில்களிலும் ஒரே கட்டண முறையை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முன்னாள் திட்ட இயக்குனர் ராமநாதன் கூறுகையில், தற்போது, சென்னை உள்பட 20 நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 19 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், மெட்ரோ ரயில் கட்டணத்தில் பல்வேறு முரண்பாடு இருப்பதாக பயணியர் புகார் தெரிவித்து வருகின்றனர். கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இதில், அனைத்து மெட்ரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே, ரயில்வே துறையில் இருப்பது போல், கிலோ மீட்டர் துாரத்தை கணக்கிட்டு, அனைத்து மெட்ரோ ரயில் நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. பெரிய நகரங்களுக்கு ஒரு வகையான கட்டணமும், சிறிய நகரங்களுக்கு சற்று குறைவான கட்டண முறையையும் கொண்டுவரலாம் என்று ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu