யாழ்ப்பாணம் - மதுரை விமான சேவை தொடக்கம்.. இலங்கை விமான சேவை அமைச்சகம் பேச்சுவார்த்தை!

இந்தியாவில் உள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கை விமான சேவை அமைச்சகம் யாழ்ப்பாணம் மதுரை இடையே விரைவில் விமான சேவை தொடங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மதுரை-கொழும்பு இடையே முதல் சர்வதேச விமான சேவை 2012 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. தற்போது தினமும் மதுரையில் இருந்து கொழும்புவிற்கு நேரடி விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கி வருகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் மதுரை இடையே விமான சேவை தொடங்குவதற்காக இந்தியாவில் உள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கை […]

இந்தியாவில் உள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கை விமான சேவை அமைச்சகம் யாழ்ப்பாணம் மதுரை இடையே விரைவில் விமான சேவை தொடங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மதுரை-கொழும்பு இடையே முதல் சர்வதேச விமான சேவை 2012 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. தற்போது தினமும் மதுரையில் இருந்து கொழும்புவிற்கு நேரடி விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கி வருகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் மதுரை இடையே விமான சேவை தொடங்குவதற்காக இந்தியாவில் உள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கை விமான சேவை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த விமான சேவை தினசரி சேவையாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரால் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தின் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 2009-ல் போர் முடிவுக்கு வந்தது. பின் இந்தியாவின் நிதி உதவியுடன் மீண்டும் புனரமைப்பதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியது. மேலும் உள்நாட்டில் நடந்த பல போராட்டங்களின் காரணங்களால் புனரமைக்கும் பணிகள் தொடர்ந்து தாமதமானது. இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி உதவியுடன் பலாலி விமான நிலையம் முழுமையாக புனரமைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 17. 10. 2019 அன்று இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் 2020-ல் விமான நிலையம் மூடப்பட்டது.

டிசம்பர் 2020-ல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகள் விமான சேவை அலைன்சியர் மூலம் மீண்டும் தொடங்கப்பட்டது. இது வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் தற்போது 16/7/2023 முதல் தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu