லக்னோவில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவாவுக்கு விமான சேவையைத் தொடங்கியது ஏர் ஏசியா

August 6, 2022

ஏர் ஏசியா  பிரைவேட் லிமிடெட் என்பது டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம் லக்னோ மற்றும் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் கோவா இடையே நேரடி விமான சேவையை இயக்கவுள்ளது. இதனை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர். லக்னோ விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். நிகழ்சியில் புதிய […]

ஏர் ஏசியா  பிரைவேட் லிமிடெட் என்பது டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம் லக்னோ மற்றும் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் கோவா இடையே நேரடி விமான சேவையை இயக்கவுள்ளது. இதனை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர். லக்னோ விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். நிகழ்சியில் புதிய விமானப் பாதைகளை அறிமுகம் செய்த பின் உரையாற்றிய ஜோதிராதித்ய சிந்தியா , ஒரு விமான நிறுவனம் ஒரு நகரத்தை 8 இணைப்பு விமானங்களுடன் இந்தியாவின் 5 இடங்களுக்கு இணைத்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்று கூறினார்.

மேலும் இந்த சாதனைக்காக ஏர் ஏசியா மற்றும் உத்தரபிரதேச அரசுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக ௯றினார். அதாவது நாள் ஒன்றுக்கு லக்னோவிலி௫ந்து டெல்லிக்கு 3 விமானங்களும், பெங்களூருக்கு 2 விமானங்களும், மும்பைக்கு 1 விமானமும், கொல்கத்தாவிற்கு ஒரு விமானமும் மற்றும் கோவாவிற்கு ஒரு விமானமும் இயங்கவுள்ளது. லக்னோ மற்றும் டெல்லி, பெங்களூரு, கோவா இடையேயான சேவை வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. அதேபோல் லக்னோ மற்றும் மும்பை,  கொல்கத்தா இடையேயான சேவை செப்டம்பர் 1, 2022 அன்று தொடங்கும் என ௯றினார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சிவில் விமான சேவையை ஊக்குவிப்பதற்காக அமைச்சகம் மேற்கொண்ட பணிகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், உடான் திட்டத்தின் கீழ், உத்தரபிரதேச மாநிலத்திற்கு 63 புதிய வழித்தடங்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் ௯றினார். உத்தரபிரதேசத்தில் 5 சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படும். இது நாட்டின் முக்கிய அடையாளமாகும். இதற்காக சித்ரகூட், முராதாபாத், அலிகார், அசம்கர் மற்றும் ஷ்ரவஸ்தி ஆகிய இடங்களில் விமான நிலையங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்கிறோம் என்றார்.

 

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu