பாபா சித்திக் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து அறிவித்தால் 10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் தலைவரான பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் உள்ளார். மேலும் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வரும் அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் வழங்கினால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்மோல் மீது 2022ம் ஆண்டு 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, மேலும் 2023ல் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும் அவர் தேடப்பட்டுவருகிறார்.














