வர்த்தக சமையல் எரிவாயுவின் விலை ரூ.36.50 குறைந்து, ரூ.2,141 ஆக நிர்ணயம்

August 1, 2022

நாடு முழுவதும் வர்த்தக சமையல் எரிவாயுவின் விலை ரூ.36.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலையில் நடப்பு மாதம் மாற்றம் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கடந்த மே மாதம் 2 முறை வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக சமையல் எரிவாயுவின் […]

நாடு முழுவதும் வர்த்தக சமையல் எரிவாயுவின் விலை ரூ.36.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலையில் நடப்பு மாதம் மாற்றம் செய்யப்படவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.

கடந்த மே மாதம் 2 முறை வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டது. இதனால் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை ஆயிரம் ரூபாயையும், வர்த்தக சமையல் எரிவாயுவின் ரூ. 2 ஆயிரத்தையும் தாண்டியது. ஜூன் மாதத்தில் வர்த்தக சமையல் எரிவாயுவின் விலையில் ரூ.134 குறைக்கப்பட்டது.
ஜூலை 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்த புதிய விலை பட்டியலில் 2வது மாதமாக வீட்டு உபயோக வின் விலையில் மாற்றம் செய்யப்படாமல், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 187 ரூபாய் குறைக்கப்பட்டது. 2,373 ரூபாயாக இருந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.2,186 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து அதே மாதத்தில் ரூ.8.50 குறைந்து ரூ.2,177.50 ஆக விற்பனையாகி வந்தது.

இந்நிலையில், நடப்பு மாதம் ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்த புதிய விலை பட்டியலில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படாமல், சென்னையில் ரூ.1018.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலையில் ரூ.36.50 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.2,177.50ல் இருந்து ரூ.36.50 குறைத்து, ரூ.2,141 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu