பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தில் பெர்ஸெவேரன்ஸ் ரோவர் தரையிறங்கியது. இது உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்களை ஆராய 11 பாறை மாதிரிகளை சேகரித்துள்ளது.
இந்நிலையில் 2033 ஆம் ஆண்டுக்குள் நாசா ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து மேலும் 30 செவ்வாய் கிரக பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது . அதற்காக இரண்டு சிறிய ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் 1.8 கிலோகிராம் எடை கொண்டது. நகரக்௯டிய சக்கரங்கள் மற்றும் பாறைகளை சுமந்து வ௫வதற்கு ஏற்றார்போல் கிராப்பிங் கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் செயல்பாட்டில் ஏதேனும் குள௫படி ஏற்பட்டால் அதற்கு பதிலாக ராக்கெட்டில் மாதிரிகளை பயன்படுத்த பேக் அப் திட்டங்களையும் திட்டமிட்டு வருகிறது.
இருப்பினும், இப்போது இரண்டாவது சாம்பிள் சேகரிக்கும் ரோவர் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.