AI-171 விமான விபத்து நினைவாக ₹500 கோடி நல அறக்கட்டளை

குஜராதில் நடந்த AI-171 விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்ததையடுத்து, பாதிக்கப்பட்டோருக்காக டாடா குழுமம் ₹500 கோடி நிதியுடன் நல அறக்கட்டளையை மும்பையில் தொடங்கியுள்ளது. அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி கொடூர விபத்தில் சிக்கியது. விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர்; ஒருவரே உயிருடன் மீட்கப்பட்டார். விடுதி வளாகத்தில் மற்றும் அருகில் இருந்த மேலும் […]

குஜராதில் நடந்த AI-171 விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்ததையடுத்து, பாதிக்கப்பட்டோருக்காக டாடா குழுமம் ₹500 கோடி நிதியுடன் நல அறக்கட்டளையை மும்பையில் தொடங்கியுள்ளது.

அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி கொடூர விபத்தில் சிக்கியது. விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர்; ஒருவரே உயிருடன் மீட்கப்பட்டார். விடுதி வளாகத்தில் மற்றும் அருகில் இருந்த மேலும் 19 பேரும் உயிரிழந்தனர். மொத்தமாக 260 உயிர்கள் பலியானது இந்த விபத்தில் பெரும் இழப்பாகும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு முழு மருத்துவச் செலவையும் டாடா குழுமம் ஏற்பது என உறுதியளித்தது. தற்போது, 'AI-171 நினைவு மற்றும் நல அறக்கட்டளை' என்ற பெயரில் மும்பையில் ₹500 கோடி நிதியுடன் புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்டோர் நலன் மற்றும் நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu