டெல்லி விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டு பயணிகளில் 0.5% பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
சீனாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. இதுகுறித்து டெல்லி விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்துவரும் ஜெனஸ்டிரிங்ஸ் டயகனாஸ்டிக் மருத்துவ மையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், டிசம்பர் 24 ஆம் தேதி 110 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. டிசம்பர் 25-ம் தேதி 345 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 0.5 சதவீதம் பேருக்கும் குறைவான நபர்களே கரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தனர்.
டெல்லி விமான நிலையத்தில் தினந்தோறும் சராசரியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் இருந்து வருகின்றனர். இதில் 2% ரேண்டம் மாதிரி பரிசோதனை செய்ய உத்தரவு வந்துள்ளது. அதன்படி சுமார் 500 பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. கரோனா பரிசோதனை செய்ய கூடுதல் அதிகாரிகளை நியமித்துள்ளோம் என்றார்.














