ட்விட்டரில், பயனர் கோரிக்கைகளை ஏற்று, பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்படுகின்றன. அந்த வகையில், ஏற்கனவே பதிவு செய்த ட்வீட்டை எடிட் செய்யும் அம்சம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்கான அவகாசம் 30 நிமிடங்களாக இருந்தது. தற்போது, இந்த கால அவகாசம் ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தாங்கள் பதிவிட்ட செய்தியை ஒரு மணி நேரத்திற்குள்ளாக பயனர்கள் திருத்தம் செய்ய முடியும். அதே வேளையில், தங்களது பதிவை நீக்குவதற்கு ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், திருத்தம் செய்யப்பட்ட பதிவு சுட்டிக்காட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில், 'ட்வீட் எடிட்' என்ற அம்சம் மூலம், பதிவுகளை திருத்தம் செய்யும் வசதி கொடுக்கப்படுகிறது. மேலும், இதுபோன்ற எதிர்கால அம்சங்கள் ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு முன்கூட்டியே கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.