பிரேசில் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதால் ஒருவர் பலியாகினார்.
பிரேசில் சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கி தாக்குதல் நடந்தது. காரில் வந்த சில பேர் விமான நிலையத்தில் புகுந்து, திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். கொலை செய்யப்பட்டவர் அன்டோனியா வின்சியஸ் லோபஸ் கிரிட்ஸ்பேச் என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சர்வதேச கிரிமினல் குழுவின் கொலை மிரட்டலை பெற்றவர். மேலும் கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபட்டவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்று தற்போது தெளிவாக இல்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவி இருக்கும் வீடியோவில் 2 பேர் தொடர்புடையதாக தெரிகிறது. தாக்குதல் டெர்மினல் இரண்டில் நடந்தது. இது உள்ளூர் விமான போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.














