இலவச கல்வி திட்டத்தில் சேர 1 லட்சம் குழந்தைகள் விண்ணப்பம்

இலவச கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் சேர 1 லட்சம் குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர். இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் சேர்ந்து படிக்கும் ஏழை மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் வருகிற கல்வியாண்டிற்கான இலவச மாணவர் […]

இலவச கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் சேர 1 லட்சம் குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர்.

இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் சேர்ந்து படிக்கும் ஏழை மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் வருகிற கல்வியாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பிப்பதற்கான காலஅவகாசம் 18-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதுவரை 1லட்சம் பேர் இதில் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் இடங்களை விட விண்ணப்பங்கள் அதிகமாக வந்துள்ள பள்ளிகளில் குலுக்கல் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu