புளோரிடாவில் இயன் சூறாவளி கரையைக் கடந்ததால், அப்பகுதியில் அதிக காற்று, கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரமின்றி தவித்தனர்.
புளோரிடாவில் இயன் சூறாவளி கரையைக் கடந்தது. அப்போது இணைய தளத்தின் மூலம் கண்காணிக்கப்பட்ட 11 மில்லியன் மக்களில், 1,040,000 பேர் மின்சாரமின்றி தவித்தனர் என்று செய்தி தெரிவித்துள்ளது. மேலும் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை உய௫ம் வாய்புள்ளதால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.