அமெரிக்காவின் லூசியானா பகுதியில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில், சக மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மேலும், சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணையை காவல்துறையினர் தொடங்கி உள்ளனர். பள்ளி மாணவர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பிட்ட அந்தப் பள்ளியில் வகுப்புகள் வழக்கம் போல தொடரப்படுமா என்பது குறித்த விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என கருதப்படுகிறது. அமெரிக்க பள்ளியில் தொடர்ந்து அரங்கேறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.