இன்றைய வர்த்தக நாளில் அதானி குழும பங்குகள் அனைத்தும் ஏற்றம் பெற்றுள்ளன. இன்றைய வர்த்தகத்தில் ஏற்றம் பெற்ற முதன்மை நிறுவனமாக அதானி எண்டர்பிரைசஸ் உள்ளது. எனவே, அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட 57000 கோடி வரவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய வர்த்தக நாளில், அதானி குழுமத்துக்கு 112785.55 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மிகப்பெரிய வீழ்ச்சியை அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் பதிவு செய்தன. ஆனால், மறுநாளான இன்றே, அதானி குழுமத்தை சேர்ந்த அனைத்து நிறுவனங்களும் ஏற்றம் பெற்றுள்ளன. அதானி குழுமத்தை சேர்ந்த முக்கிய நிறுவனங்களான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் 4 முதல் 7% வரை உயர்ந்துள்ளன. அதானி போர்ட்ஸ், அதானி வில்மர் ஆகியவை 2 முதல் 3% உயர்வை பதிவு செய்துள்ளன.














