2023 ஆம் ஆண்டில், இரவு வானில், காணக்கூடிய வகையில் நிகழக்கூடிய 10 முக்கிய வானியல் நிகழ்வுகளின் பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த வானியல் நிகழ்வுகளை, இரவு நேர வானில், சாதகமான பருவநிலை மற்றும் வானிலை சூழல் நிலவும் பட்சத்தில் காண முடியும் என கூறப்பட்டுள்ளது.
1. ஜனவரி 22ஆம் தேதி வெள்ளி மற்றும் சனி கோள்கள் மிகவும் நெருக்கமாக காணப்படும்.
2. ஜனவரி இறுதி முதல், பிப்ரவரி முதல் பாதி வரை, Comet C/2022E3 (ZTF) வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் காணலாம்.
3. மார்ச் 1ம் தேதி வெள்ளி மற்றும் வியாழன் கோள்கள் இணைந்து காட்சியளிக்கும்.
4. ஏப்ரல் 20ம் தேதி சூரிய கிரகணம்.
5. ஆகஸ்ட் 12ம் தேதி, எரி நட்சத்திரங்கள் பூமியில் விழுவதை தெளிவாக காணலாம்.
6. ஆகஸ்ட் 24ஆம் தேதி, அண்டாரஸ் நட்சத்திரத்திற்கு பின்னால் நிலவு மறைவதை காணலாம்.
7. ஆகஸ்ட் 30ஆம் தேதி சூப்பர் மூன் நிகழ்வு.
8. அக்டோபர் 14ஆம் தேதி, வளைய சூரிய கிரகணம்.
9. நவம்பர் 9ம் தேதி, நிலவு மற்றும் வெள்ளி நட்சத்திரங்கள் ஒன்றாக மின்னும் காட்சியை காணலாம்.
10. டிசம்பர் 13ஆம் தேதி, ஜெமினிட் எரி நட்சத்திரங்கள் பூமியில் விழுவதை காணலாம்.