கோயம்பேடு மார்க்கெட்டில் சீரமைப்புப் பணிகளுக்கான ரூ.10 கோடி டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை ஒரே இடத்தில் நடைபெற்று வருகிறது. பல மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர், இதனால் மார்க்கெட்டில் எப்போதும் வியாபாரிகள் கூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டின் சீரமைப்புக்கான பணிகளுக்கு ரூ.10 கோடியில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், இங்கு உயரமான கோபுர விளக்குகள், T வடிவ மின்கம்பங்கள் மற்றும் மின்விளக்குகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.














