கலை நிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி – ஆளுநர் ஒப்புதலுடன் புதிய சட்ட திருத்தம்

கலை நிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கட்டணத்துடன் நடைபெறும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீத கேளிக்கை வரி விதிக்க சட்டத்திருத்த மசோதா கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்தார். தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதிய பிரிவை சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மசோதா, கல்வி […]

கலை நிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கட்டணத்துடன் நடைபெறும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீத கேளிக்கை வரி விதிக்க சட்டத்திருத்த மசோதா கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்தார். தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதிய பிரிவை சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மசோதா, கல்வி நிறுவனங்கள், சங்கங்கள், குழுக்கள், மற்றும் குழுமங்களின் பெயரில் இயங்கும் கழக வளாகங்கள், மைதானங்கள், நுழைவுச்சீட்டு அல்லது சந்தா வசூலிக்கப்படும் இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு பொருந்தும். இவையனைத்திற்கும் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீத கேளிக்கை வரியை வசூலிக்கலாம் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா தற்போது ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் ஒப்புதலை பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu