பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழை காரணமாக 10 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பனிப்புயல் ஏற்பட்டது. இதில் சுமார் 27 வீடுகள் சேதம் அடைந்தன. இந்த சம்பவத்தில் எட்டு குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் கூறினர். அதோடு கடந்த வியாழன் அன்று கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடக்கத்தை தொடர்ந்து மழை மற்றும் பனிப்புயல் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.