தமிழக அரசு 10 காவல் அதிகாரிகளை மாற்றி நியமிக்கும் உத்தரவை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு 10 காவல் அதிகாரிகளை மாற்றி நியமிக்கும் உத்தரவை வெளியிட்டுள்ளது. ஜாகீர் உசேன் கொலை சம்பவத்தையடுத்து, நெல்லை சரக டிஐஜி மூர்த்தி மாற்றப்பட்டு, நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு கூடுதல் பொறுப்பாக அந்த பதவியும் வழங்கப்பட்டுள்ளது. மதுரை சரக டிஐஜியாக அபினவ் குமார், ராமநாதபுரம் சரக டிஐஜியாக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய சுஜாதா, ஈரோடு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஈரோடு எஸ்.பி.யாக பணியாற்றிய ஜவகர், சிபிசிஐடி சென்னை வடக்கு மண்டல எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். மேலும், ஹரிகிரணம் பிரசாத் மயிலாப்பூர் நலப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.














