சர்வதேச போ௫ளாதார வீழ்ச்சி காரணமாக மைக்ரோசாஃப்ட், டெஸ்லா, நெட்ஃபிக்ஸ், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நீக்கியுள்ளன. இதேபோல் தற்போது ஆப்பிள் (Apple) நிறுவனமும் சுமார் 100 ஒப்பந்த ஊழியர்களை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்துக் ௯றிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் ஆப்பிள் நிறுவனமானது செலவுகளை குறைப்பதற்காக சுமார் 100 ஒப்பந்த ஊழியர்களை வெளியேற்றியுள்ளது என்று கூறினார். மேலும் காலியாக இருக்கும் பணியிடங்களையும் குறைப்பதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ௯றினார்.
இது போல் ௯குள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.














