பொங்கல் பண்டிகை காலத்தில் ஆவின் நெய் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் விதமாக 100 மிலி மற்றும் 200 மிலி அளவுகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 100 மிலி, 200 மிலி ஆவின் நெய் அதிக அளவில் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 லட்சம் எண்ணிக்கையிலான 100 மிலி, 200 மிலி ஆவின் நெய் பாட்டில்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
இதனை திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆலைகளில் தயாரித்து, பாட்டில்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படும். ஆவின் நெய் 100 மிலி முதல் 5 லிட்டர் வரை பல அளவுகளில் கிடைக்கிறது. மேலும், பண்டிகைக் காலத்தில் பல்வேறு ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை இலக்கை அடையவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.