நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 அதிகரித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கி உள்ளது. www.nta.nic.in என்ற இணையதளத்தில் வருகிற ஏப்ரல் 6 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட பொதுப்பிரிவின், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதி வகுப்பினர் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்க கடந்த ஆண்டை விட 100 ரூபாய் கட்டணத்தை தேசிய தேர்வு முகமை உயர்த்தி உள்ளது. பொது பிரிவினருக்கு 1,700 ரூபாயும், பிற்படுத்தப்பட்டோருக்கு 1,600 ரூபாயும், எஸ்.சி.எஸ்.டி. மாணவர்களுக்கு 1,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணம் ரூ.8500-ல் இருந்து ரூ.9,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.