மாண்டஸ் புயல் கரையை நெருங்கும் போது அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், தென் மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல், புயலாக வலுவிழந்தது. சென்னைக்கு தென் கிழக்கே 260 கி.மீ., காரைக்காலில் இருந்து வட கிழக்கே 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.
இது புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும். இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும். புயல் கரையை நெருங்கும் போது அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். நாளை முற்பகல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுகுறையும் என்று கூறினார்.














