இந்திய ராணுவ தளவாட துறையில் 100% முதலீடு செய்ய ஸ்வீடன் நிறுவனத்துக்கு அனுமதி

November 6, 2023

பொதுவாக, இந்திய ராணுவ தளவாட துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படாது. ஆனால், வரலாற்றில் முதல் முறையாக, ஸ்வீடனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு 100% முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ தளவாட துறையில், 74% மட்டுமே அந்நிய முதலீடுகள் இருக்கும். தற்போது, முதல் முறையாக, ஸ்வீடனைச் சேர்ந்த சாப் (Saab) என்ற நிறுவனம் 100% முதலீடு செய்ய உள்ளது. அதற்கான முறையான ஒப்புதலை இந்தியா வழங்கியுள்ளது. அதன்படி, ஹரியானாவில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் […]

பொதுவாக, இந்திய ராணுவ தளவாட துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படாது. ஆனால், வரலாற்றில் முதல் முறையாக, ஸ்வீடனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு 100% முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ தளவாட துறையில், 74% மட்டுமே அந்நிய முதலீடுகள் இருக்கும். தற்போது, முதல் முறையாக, ஸ்வீடனைச் சேர்ந்த சாப் (Saab) என்ற நிறுவனம் 100% முதலீடு செய்ய உள்ளது. அதற்கான முறையான ஒப்புதலை இந்தியா வழங்கியுள்ளது. அதன்படி, ஹரியானாவில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் ஆலை ஒன்றை சாப் நிறுவனம் அமைக்க உள்ளது. அங்கு, இந்திய ராணுவத்துக்கான ராக்கெட் லாஞ்சர்கள் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்திய ராணுவத்தில் 100% முதலீடு செய்தது குறித்து சாப் நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu