கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் - ஆகஸ்ட் 17 வெளியீடு

August 8, 2024

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு மற்றும் திமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு, கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 4 அன்று ரூ.100 மதிப்பிலான சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த நாணயம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் விழா வரும் ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. […]

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு மற்றும் திமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு, கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 4 அன்று ரூ.100 மதிப்பிலான சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த நாணயம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் விழா வரும் ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu