கர்நாடக மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தில் பாராளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 100% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தென் கன்னட பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெல்தங்கடி வட்டத்தின் பஞ்சருமேல குக்கிராமத்தில் நூறு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த கிராமத்தில் மொத்தம் 111 வாக்குகள் உள்ள நிலையில் அனைவரும் இரண்டு மணி நேரங்களுக்கு முன்னதாகவே வாக்களித்து விட்டனர். காட்டுப்பகுதி அமைந்துள்ள அந்த கிராமங்களில் பழங்குடி விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்த வசதிகளும் இல்லையெனினும் அனைவரும் தவறாமல் வாக்களித்ததற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாராட்டு தெரிவித்துள்ளது.