'அம்ருத் பாரத்' ரயில் நிலைய திட்டத்தின் கீழ், முக்கியமான 1,000 சிறிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நாட்டில் உள்ள 200 பெரிய ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்வதற்காக அம்ருத் ரயில் நிலைய திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்தது. இத்திட்டத்தின் கீழ், சில சிறிய ரயில் நிலையங்களும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டின் முக்கியமான 1,000 சிறிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிக செலவின்றி இந்த பணியை நடைமுறைப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த நவீனமயமாக்கல் பணியை ரயில்வே மண்டல மேலாளர்கள் படிப்படியாக செய்து முடிப்பர். இதற்காக அவர்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட உள்ளது. ரயில் நிலையங்களில் தற்போது உள்ள வசதிகளை மாற்றவும், புதிய பல நவீன வசதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.