ஒற்றை புகைப்படத்தில் ஒரு லட்சம் கேலக்ஸிகள் - யூக்ளிட் தொலைநோக்கியின் முதல் புகைப்படம்

November 10, 2023

யூக்ளிட் தொலைநோக்கி அனுப்பிய முதல் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் எண்ணற்ற கேலக்ஸிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 4 மாதங்களுக்கு முன்னால், கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஐரோப்பிய விண்வெளி மையத்தின் யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தொலைநோக்கி, அகண்ட பிரபஞ்சத்தை மிகவும் ஆழமாக பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 240 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 1000 கேலக்ஸிகளை இது படம் பிடித்துள்ளது. இதன் பின்னணியில், ஒரு […]

யூக்ளிட் தொலைநோக்கி அனுப்பிய முதல் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் எண்ணற்ற கேலக்ஸிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னால், கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஐரோப்பிய விண்வெளி மையத்தின் யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தொலைநோக்கி, அகண்ட பிரபஞ்சத்தை மிகவும் ஆழமாக பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 240 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 1000 கேலக்ஸிகளை இது படம் பிடித்துள்ளது. இதன் பின்னணியில், ஒரு லட்சம் கேலக்ஸிகள் இருப்பது காட்டப்பட்டுள்ளது. அதாவது, பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கேலக்ஸிகளை கூட, இந்த தொலைநோக்கி படம் பிடித்துக் காட்டியுள்ளது. எனவே, இந்த தொலைநோக்கி மூலம், விண்வெளி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu