27 April 2022, தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வு
இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில், தேர்வுப் பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளன. தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவிப்பின் படி,வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்குத் தேவையான வசதிகளை மாவட்டக்கல்வி அதிகாரிகள் ஏற்படுத்தி, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், காவலர் மற்றும் அலுவலக அதிகாரிகள் தினமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.மேலும்,மொத்தம் 3,936 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும்,பொதுத்தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, கட்டுக்காப்பு மையங்களுக்கு விடைத்தாள்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள 300-க்கும் மேலான கட்டுக்காப்பு மையங்களுக்கு வினாத்தாள்கள் தற்போது பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகிறது. இன்னும், ஓரிரு நாட்களில் அனைத்து மையங்களுக்கும் வினாத்தாள்கள் சென்றடைந்துவிடுமென கூறியுள்ளனர்.