1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் நாளை வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி 1,091 தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாளை வெளியிடப்பட உள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களை 99 சதவீத மக்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. மக்கள் தாங்கள் பேசும் மொழியில் சட்டங்களை புரிந்து கொள்வது அவசியம். இதன் ஒரு பகுதியாக உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய 4 பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்ய நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.














