நாட்டின் முதல் 10G ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் ஹெபெய் மாகாணம், சியோங்கான் நியூ பகுதியில், ஹூவாய் மற்றும் சீனா யூனிகாம் இணைந்து, நாட்டின் முதல் 10G ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கிற்கு அருகில் அமைந்துள்ள இந்த இடம், தொழில்நுட்ப மையமாக வளர்ந்துவருகிறது. புதிய நெட்வொர்க் சேவையின் பதிவிறக்கம் வேகம் 9834 Mbps மற்றும் பதிவேற்ற வேகம் 1008 Mbps என குறிப்பிடப்பட்டுள்ளது. 2 மணி நேர திரைப்படத்தை வெறும் சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்த சேவை, 50G PON ஆப்டிகல் நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. சீனாவின் மற்ற பகுதிகளிலும் விரைவில் இது அறிமுகமாக உள்ளது.5G சேவை தற்போது தான் அறிமுகமாகும் இந்தியாவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.