பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் தரவரிசை பட்டியலானது ஜூலை 10ஆம் தேதி வெளியாகிறது.
பொறியியல் படிப்பில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு முடிவடைந்தது. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவ மாணவிகள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். அடுத்து ஜூன் 12-ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத் துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகிய அனைத்து கல்லூரிகளும் அடங்கும். இந்த கல்லூரிகளில் பி.இ, பி. டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.பொது கலந்தாய்வு மூலம் இவை நிரப்பப்படும். இந்நிலையில் தொழில்நுட்ப இயக்ககம் ஏற்கனவே வெளியிட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை 2024 கால அட்டவணையின் படி ஜூன் 12-ம் தேதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஆகும். மேலும் அன்றே ரேண்டம் நம்பர் எனப்படும் வாய்ப்பு எண் மாணவர்களுக்கு இணைய வழியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்பு ஜூன் 13ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும். அதனை தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விருப்பமான கல்லூரி மற்றும் பாட பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது