தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் லிஃப்ட் விழுந்து 11 போ் பலி

November 29, 2023

தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் லிஃப்ட் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 11 போ் பலியாகினர். தென்னாப்பிரிக்காவில் உள்ள ரெஸ்ட்டன் பக் நகரில் பிளாட்டினம் சுரங்க ஆலை உள்ளது. இங்கு மின் தூக்கி கம்பி கயிறு அறுந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுமார் 75 பேர் காயமடைந்தனர். ரெஸ்டின் பார்க் நகரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுரங்கத்தில் கடந்த திங்களன்று இரவு விபத்து ஏற்பட்டது. பணி நேரம் முடிந்து தொழிலாளர் குழுவினர் மாறும் போது இந்த […]

தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் லிஃப்ட் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 11 போ் பலியாகினர்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள ரெஸ்ட்டன் பக் நகரில் பிளாட்டினம் சுரங்க ஆலை உள்ளது. இங்கு மின் தூக்கி கம்பி கயிறு அறுந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுமார் 75 பேர் காயமடைந்தனர்.
ரெஸ்டின் பார்க் நகரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுரங்கத்தில் கடந்த திங்களன்று இரவு விபத்து ஏற்பட்டது. பணி நேரம் முடிந்து தொழிலாளர் குழுவினர் மாறும் போது இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தென்னாபிரிக்கா பிளாட்டினம் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு ஆகும். இங்கு பல்வேறு சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu