தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

December 15, 2023

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக ஏடிஜிபி கல்பனா நாயக், சிறைத்துறை ஏடிஜிபியாக மகேஸ்வர தயாள், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் பாரு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் பிரமோத்குமார் TANGEDCO நிறுவனத்தின் ஐ ஜி ஆகவும், தமிழ் சந்திரன் மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐ.ஜி ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை மாநகர சட்டம் […]

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக ஏடிஜிபி கல்பனா நாயக், சிறைத்துறை ஏடிஜிபியாக மகேஸ்வர தயாள், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் பாரு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் பிரமோத்குமார் TANGEDCO நிறுவனத்தின் ஐ
ஜி ஆகவும், தமிழ் சந்திரன் மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐ.ஜி ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக தர்மராஜன், கோவை சிவில் சப்ளை சிஐடி பிரிவு எஸ்.பி ஆக சந்திரசேகரன், மதுரை மாநகர துணை ஆணையராக பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ஆக பிரதீப், சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஆக சமய சிங் மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu