டெல்லியில் அடுக்குமாடி இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் நான்கு மாடி அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பலர் கட்டிட இடிபாடுகளின் கீழ் சிக்கினர். முதல் கட்டமாக 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற்று, இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதில் 3 குழந்தைகளும் உள்ளனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் வீட்டின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தலைமை அமைச்சர் ரேகா குப்தா சம்பவத்தில் இரங்கல் தெரிவித்ததுடன், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தனர். மோடி, பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.