ஆஸ்திரேலியாவை சேர்ந்த 11 வயது சிறுமி பிக்சி குர்திஸ், குழந்தைகளுக்கான பொம்மை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது தாய் ராக்சி ஜாசென்கோ உடன் இணைந்து, 'பிக்சி பிட்ஜெட்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், குழந்தைகளுக்கான பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியாக சிறுமி பிக்சி உள்ளார். இந்நிலையில், தனது பள்ளி படிப்பில் கவனம் செலுத்துவதற்காக, நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிக்ஸியின் நிறுவனம் 1.09 கோடி அளவில் மாத வருமானத்தை பதிவு செய்து வருகிறது. அதன்படி, சிறுமி பிக்சி அதிக வருமானம் ஈட்டும் இளம் தொழிலதிபராக உள்ளார். இந்த நிலையில், கல்வியில் கவனம் செலுத்த கூறி, அவரது தாயார் அறிவுரை கூறியதால், பணி ஓய்வை அறிவிக்க உள்ளார். விரைவில் நடைபெற உள்ள பிக்சியின் 12 வது பிறந்தநாள் விழாவில், இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் தளத்தில் பிக்சி மிகவும் பிரபலமானவர் என்பதால், அவரது பிறந்தநாள் விழா குறித்த பல்வேறு அறிவிப்புகள் கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக, விருந்தினர்களுக்கு 4000 ரூபாய் மதிப்புள்ள அழகு சாதனப் பொருட்கள் தரப்படும் என்ற அறிவிப்பு எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.