மு.க.ஸ்டாலின் 11-ந்தேதி கேரளா பயணம்

December 9, 2024

பெரியார் நினைவகத்தின் புனரமைப்பு மற்றும் 100வது ஆண்டு விழா கேரளாவில் நடைபெற உள்ளது. கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் 100 ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக, 1994-ல் தந்தை பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கினார். இப்போது அங்கு, பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர்களுக்கான மாடம், சிறுவர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. 1994-ல் திறக்கப்பட்ட இந்த […]

பெரியார் நினைவகத்தின் புனரமைப்பு மற்றும் 100வது ஆண்டு விழா கேரளாவில் நடைபெற உள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் 100 ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக, 1994-ல் தந்தை பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கினார். இப்போது அங்கு, பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர்களுக்கான மாடம், சிறுவர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. 1994-ல் திறக்கப்பட்ட இந்த நினைவகம், தற்போது ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் துவக்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 11-ம் தேதி கேரளா செல்லவுள்ளார். 12-ந்தேதி, பெரியார் நூற்றாண்டு விழாவும் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின், பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து, சிறப்புரையாற்றவுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu