கர்நாடகாவில் 12 மணி நேர வேலை திட்டம் வாபஸ் – தொழிற்சங்க போராட்டத்திற்கு வெற்றி

ஐ.டி மற்றும் ஐ.டி.இ.எஸ். ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை நேரம் அமல்படுத்தும் அரசின் முடிவு தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்புக்கு பின் வாபஸ் பெறப்பட்டது. கர்நாடக அரசு 10 மணி நேர வேலை விதியை மாற்றி 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் திருத்த மசோதா-2025ஐ கொண்டு வர திட்டமிட்டது. இதனால் ஊழியர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த 6 வாரங்களாக நடைபெற்ற போராட்டங்களின் பின் தொழிலாளர் நலத்துறை […]

ஐ.டி மற்றும் ஐ.டி.இ.எஸ். ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை நேரம் அமல்படுத்தும் அரசின் முடிவு தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்புக்கு பின் வாபஸ் பெறப்பட்டது.

கர்நாடக அரசு 10 மணி நேர வேலை விதியை மாற்றி 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் திருத்த மசோதா-2025ஐ கொண்டு வர திட்டமிட்டது. இதனால் ஊழியர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த 6 வாரங்களாக நடைபெற்ற போராட்டங்களின் பின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் ஜி.மஞ்சுநாத் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தொழிற்சங்கங்களின் வலியுறுத்தலின் பேரில் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாடும் உறுதிப்படுத்தினார். தொழிலாளர் நலனுக்காக நடந்த இந்த வெற்றி, தொழிற்சங்கங்கள் மற்றும் ஐ.டி. ஊழியர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் பலன் என கே.ஐ.டி.யு. தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu