சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பண்டுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடியது. இதில் முதலில் ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 191 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்படி 20 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீசவில்லை என அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ஐபிஎல் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.