இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு

March 18, 2023

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாகையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற அக்கரைப்பேட்டை மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பருத்தித் துறை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பொன்னுதுரை கிருஷாந்தன், மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் […]

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாகையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற அக்கரைப்பேட்டை மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பருத்தித் துறை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பொன்னுதுரை கிருஷாந்தன், மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu