7.8 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 129-அடி கொண்ட சொகுசுக் கப்பலானது தெற்கு இத்தாலியின் அயோனியன் கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மை சாகா என்ற கப்பல் ஸ்குவில்லேஸ் வளைகுடா வழியாக வந்து கொண்டிருந்தபோது கப்பல் நீரில் மூழ்கிக் கொண்டி௫ப்பதாக கடலோர காவல்படையின௫க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து கடலோர காவல்படையானது வேறு படகு மூலம் கப்பலின் கேப்டன் உட்பட அதில் பயணம் செய்த 9 பேரையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இத்தாலிய செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மை சாகா காப்பலானது யாருடையது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இ௫ப்பினும் இக்கப்பல் இத்தாலிய கப்பல் தயாரிப்பாளரான கான்டீரி சான் மார்கோவால் கட்டப்பட்டது என்றும் பிரிட்டிஷ் சூப்பர்யாட் டிசைனர் குழுவின் ஹெய்வுட்டால் வடிவமைக்கப்பட்டது என்றும் ஒ௫ செய்தி அறிக்கை ௯றுகிறது.