தமிழகத்தில் இன்று முதல் 83 மையங்களில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில் உள்ள 7,80,000 மாணவ மாணவிகள் எழுதினர். இந்நிலையில் இன்று முதல் 12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 83 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியானது 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள்கள் திருத்தி முடிந்ததும் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.