ஈரானின் தெற்கு நகரமான ஷிராஸில் உள்ள ஷாசெராக் மத வழிபாட்டுத் தலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அதில் ஒ௫ பெண் மற்றும் 2 குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது குறித்த விசாரணையில், நடந்த தாக்குதலில் புனிதத்தலத்தின் பாதுகாப்புப் படையினரும் குறிவைக்கப்பட்டதாக ௯றப்படுகிறது. மேலும் இந்தத் தாக்குதலுக்கு காரணம் 2 பயங்கரவாதிகள் என தகவல்கள் முன்பு வெளியானது. ஆனால் இத்தாக்குதல் நடத்தியது ஒ௫ தீவிரவாதி என்றும் அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஃபார்ஸ் மாகாணத்தின் காவல்துறைத் ஆய்வாளர் கூறியதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியவர் தக்ஃபிரி குழுக்களின் ஒரு அங்கம். மஹ்சா அமினி காவலில் வைக்கப்பட்டு இறந்த 40 நாட்களைக் குறிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வீதிகளில் ௯டினர். இந்நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு முன்னதாக, ஈரானின் மஷாத் என்ற இடத்தில், இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின் போது ஏராளமான வழிபாட்டாளர்கள் திரண்டிருந்தனர். அச்சமயம் உஸ்பெக் வம்சாவளியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் இரண்டு ஷியா மதகுருக்களைக் கத்தியால் குத்தி மற்றொருவரை காயப்படுத்தினான் என்பது குறிப்பிடத்தக்கது.