கொள்ளிடம் பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து சற்று குறைந்த போதிலும் தண்ணீர் கடலுக்குள் உள்வாங்காததால் தற்காசு, புளியந்துறை, பழைய பாளையம் மற்றும் புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 2000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு பயிரில் தண்ணீர் புகுந்தது. இதனால் நெற்பயிர் மூழ்கியுள்ளது. கடந்த 10 நாட்களாக நேரடி விதைப்பு நெற்பயிர் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளதால் அழுகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதனால் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, சந்தபடுகை, திட்டுபடுகை, நாணல்படுகை, அனுமந்தபுரம், மகேந்திரபள்ளி, காட்டூர், அளக்குடி, கோரைதிட்டு, புளியந்துறை, குன்னம், பெரம்பூர், மேலவாடி, வடரங்கம், சரஸ்வதிவிளாகம், குத்தவக்கரை கிராமங்களில் 13 ஆயிரம் ஏக்கர் அளவில் நேரடி விதைப்பு செய்திருந்த நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
நேரடி நெல் விதைப்பு செய்து 20 முதல் 25 நாட்கள் மற்றும் ஒரு மாதம் ஆன நிலையில் தொடர்ந்து நேரடி விதைப்பு பயிரை தண்ணீர் சூழ்ந்து மூழ்கடித்துள்ளதால் நெற்பயிர்கள் அழுகி உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் இருந்து வருகின்றனர்.














