60 வயதுக்கு மேற்பட்ட 131 அம்மா உணவக ஊழியர்கள் பணிநீக்கம்

December 7, 2022

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட 131 அம்மா உணவக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி மூலம் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் 60 வயதை கடந்த பெண் ஊழியர்கள் அம்மா உணவகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், […]

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட 131 அம்மா உணவக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி மூலம் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் 60 வயதை கடந்த பெண் ஊழியர்கள் அம்மா உணவகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அம்மா உணவக செயல்பாட்டில் எந்த குறையும் வைக்கவில்லை. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால் செலவை குறைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதியவர்களாக இருப்பதால் மாற்றுப் பணி வழங்க முடியுமா என்றும் இதர துறைகளுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu