குஜராத் மாநில முதல் கட்ட தேர்தலுக்கு 1362 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிந்தது.
இந்நிலையில், 89 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்காக மொத்தம் 1,362 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும். இதேபோல், 93 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.