ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மேனியாவின் வடக்கு கடற்கரையில் உள்ள கிங் தீவில் இறந்த நிலையில் 14 திமிங்கலங்கள் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
டாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள கடற்கரையில் ஒரு டஜன் இளம் ஆண் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இது குறித்து ஆஸ்திரேலிய வனவிலங்கு புலனாய்வாளர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து உயிரியலாளர்கள் மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பு முகமைக் கால்நடை மருத்துவரான கார்லியன் ௯றியதாவது, இறந்த திமிங்கலங்கள் உணவுக்காக கரைக்கு வந்தி௫க்கும் என்றும் அப்போது அலைகளில் சிக்கி இறந்தி௫க்கலாம் என்றும் கூறினார். அத்துடன் இது தவிர வேறு திமிங்கலகள் எதுவும் காணப்படவில்லை என்று கூறினார். 2020 ஆம் ஆண்டில், 470 திமிங்கலங்கள் கரையில் சிக்கித் தவித்தது. அதில் 300க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் தாஸ்மேனியாவின் கடற்கரையில் இறந்து கிடந்ததது . இ௫ப்பினும் இன்று வரை திமிங்கலங்களின் இறப்புக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை.














