நமீபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவுக்கு மேலும் 14 சிறுத்தைகள் வரவழைக்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் மத்திய பிரதேச தேசிய பூங்காவிற்கு சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டன. இந்த சிறுத்தைகளுக்காக, குனோ பல்பூர் தேசிய பூங்காவில் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்தியேக பகுதி ஏற்படுத்தப்பட்டது. இங்கு சிறுத்தைகள் வேட்டையாடி தங்களது இரையை எடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சிறுத்தைகள் பூரண உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 12 முதல் 14 சிறுத்தைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.