உத்தரகாண்ட் மாநில சட்டசபை கூட்டத்தொடர் நாளை டேராடூனில் தொடங்கிய உள்ளதையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநில சட்டசபை கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. கூட்டத்தொடரில் குறிப்பிட்ட பகுதியில் அமைப்புகள் மற்றும் சமூகங்களின் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகள் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதால் இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. மேலும் நாளை சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையம் சட்டப்பேரவை வளாகத்தை சுற்றி 300 மீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.